Periyar Kabaddi Championship – 2026
All India Women & Men’s Kabaddi Meet
நெஞ்சை அள்ளும் தஞ்சை தரணியில் அகில இந்திய அளவில் மாபெரும் A-Grade கபாடித் திருவிழா!
தந்தை பெரியாரின் இளையதிலகங்கள் நடத்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தலைசிறந்த வீரர்கள் கலந்துக்கொள்ளும் மாபெரும் போட்டி.
பெண்கள் மற்றும் ஆண்களுக்கு சம அளவிலான பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்த ஒருங்கிணைக்கப்படும் இந்தப்போட்டி, வீரர்களுக்கும் கபாடி ஆர்வலர்களுக்கும் மறக்கமுடியாத அனுபவத்தை உருவாக்கும்.
பெரியாரின் சிந்தனைக் களத்திலிருந்து விளைந்த
விளையாட்டுத்தளம்!
கபாடி + பெரியார் சிந்தனை இணைந்த வளர்ச்சி பாதை
கபாடி விளையாட்டை கிராம இளைஞர்களிடையில் பரப்பி பதித்தல்
கபாடி என்பது வெறும் விளையாட்டு அல்ல, கிராம இளைஞர்களின் ஆற்றலையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் ஒரு கலாச்சார மொழி. அந்த மொழியை ஒவ்வொரு இளைஞரின் அன்றாட வாழ்வில் நீக்கமற நிலைப்பெறச் செய்வதும் , வாழ்வின் அங்கமாகக் கொண்டு சேர்ப்பதுமே நோக்கம்.
வீரர்களின் தனித்திறனைக் கண்டறிந்து, தொழில்முறை (Techniques) பயிற்சியால் மேம்படுத்துதல்
இயற்கையாக உள்ள காபாடித் திறமையை மட்டும் நம்பாமல், தொழில்முறை பயிற்சி, திட்டமிட்ட ஒழுக்கம், சரியான வழிகாட்டுதல் மூலம் வீரர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சியே இந்த நோக்கம்.
சுயஒழுக்கம், நேரந்தவறாமை,உடற்தகுதி, அணித்திறன் ஆகிய விளையாட்டு கூறுகளை ஊக்குவித்தல்
ஒரு உண்மையான வீரனின் வெற்றியானது, அவரது நேரந்தவறாமை, , உடற்தகுதி, மற்றும் அணித்திறன் தான் வரையறுக்கிறது. எங்களது தந்தை பெரியாரின் இளையதிலகங்கள் கபாடிக் கழகத்தை இந்த மதிப்புறு மதிப்புகளை கற்பிக்கும் களமாக , மேம்படுத்தும் தளமாக பயன்படுத்துவதே எங்கள் நோக்கம்.
பெரியாரின் சுயமரியாதை, சமத்துவம், மற்றும் சமூகவிழிப்புணர்வு கோட்பாடுகளை இளைஞர்களின் செயல்பாடுகளில் இணைத்தல்
விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் பெறுவது மட்டுமல்ல வெற்றி! - சுயமரியாதை, சமத்துவம், சமூகவிழிப்புணர்வு கொண்ட நல்ல குடிமகனாகவும் வளரும் வகையில் பெரியாரின் சிந்தனைகளை ஒவ்வொரு இளைஞரின் செயல்பாடுகளிலும் நெய்து வைப்பதே இந்த நோக்கம்.
