டிசம்பர் 6 — சிறப்பு கலந்தாய்வு கூட்டம்
டிசம்பர் 6, உரத்தநாடு வட்டம் ஒக்கநாடு மேலையூரில் உள்ள MSP திருமண அரங்கில் , வருகின்ற பிப்ரவரி மாதம் நடத்தப்பட இருக்கின்ற அகில இந்திய அளவிளான A-Grade (பெண்கள் மற்றும் ஆண்கள் வீரர்கள் பங்கேற்கும்) கபாடி போட்டிப் பற்றிய சிறப்பு கலந்தாய்வு கூட்டம் இன்று காலை பத்துமணியளவில் தொடங்கி நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஊர்பொதுமக்கள், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முக்கியமானவர்கள், கபாடியின் மீதும், நமது கபாடிக்கழகத்தின் மீதும் ஆர்வமும் அக்கரையும் கொண்ட நபர்கள் , கபாடி ஆர்வாலர்கள் என பல்வேறு தரப்பிலான நபர்கள் கலந்துக்கொண்டு , நிகழ்ச்சியை எவ்வாறெல்லாம் திட்டமிடலாம், ஒருங்கிணைக்கலாம், செயலாற்றாலாம் என்று நிகழ்ச்சி சம்பந்தமான பல்வேறு கருத்துகளையும் , ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.