எங்களின் சிறப்புகள்

கபாடி, சமத்துவம், விருந்தோம்பல் – நம்மை வேறுபடுத்தும் சிறப்புகள்

GENDER EQUALITY • KABADDI FESTIVAL • DISCIPLINE • HOSPITALITY
⚖️
ஆண்கள்–பெண்கள் சமத்துவம்

ஆண்கள்–பெண்கள் சமத்துவத்திற்கு உண்மையான நடைமுறை

இக்கழகம் ஆண்கள் அணிக்கு வழங்கும் பரிசுத்தொகையைப் போலவே பெண்கள் அணிக்கும் அதே அளவு பரிசுத் தொகை வழங்குகிறது. பாலின பாகுபாடின்றி பெரியாரின் கொள்கைகளை விளையாட்டு வழியாக கலங்கரைவிளக்கமாக செயல்படுத்தும் அரிதான முன்னுதாரணம் இதுவாகும்.

இது ஒரு கொள்கை மட்டும் இல்லை – மைதானத்தில் நடைமுறையாகும் சமத்துவம்.

🎉
Kabaddi Festival

கபாடித் திருவிழா – ஊரின் ஒற்றுமை வெளிப்படும் பெருவிழா

ஒக்கநாடு மேலையூரில் நடைபெறும் இந்தப் போட்டி சாதாரண போட்டி அல்ல; திருவிழாவைப் போல ஊரே ஒன்றிணையும் கபாடித் திருவிழா எனும் தனிச்சிறப்பைக் கொண்டது.

  • வீடு தோறும் ஈடுபாட்டுடன் ஏற்பாடுகள்
  • கிராமமக்கள் ஒருங்கிணைந்து ஏற்ற இறக்கமின்றி பங்கேற்பு
  • வெளியூரிலிருந்து வருவோருக்கு அன்பான வரவேற்பு

இதனால் வெளியூர் வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மெய்சிலிர்க்கும் அனுபவம் உருவாகிறது.

📋
Timing & Planning

நேர்த்தி, ஒழுங்கு, திட்டமிடல் – கபாடிக் கழகத்தின் அடையாளம்

இந்த அமைப்பின் மற்றொரு பெருமை:

  • குறித்த நேரத்தில் போட்டி தொடங்கும்.
  • குறித்த நேரத்தில் போட்டி முடியும்.

போட்டிகள் அனைத்தும் நுணுக்கமான திட்டமிடலுடன் நடைபெறுவதால் வீரர்கள், நடுவர் குழு, பார்வையாளர்கள் அனைவருக்கும் ஒரு கட்டுப்பாடான, தொழில்முறை அனுபவம் கிடைக்கிறது.

🍛
Food & Care

உணவு விருந்தோம்பல் – வீரர்களுக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும்

இந்த கபாடிக்கழகத்தின் மிகப் பெரிய சிறப்புகளில் ஒன்று: போட்டி நடக்கும் அனைத்து (மூன்று, நான்கு) நாட்களும், காலை – மதியம் – இரவு என அனைத்து வீரர்களுக்கும் சாப்பாடு கறிவிருந்துடன் பரிமாறப்படுகிறது.

அதுமட்டுமல்லாது – இந்தக் கபாடித் திருவிழாவை கண்டு மகிழ வருகிற அனைத்து உள்ளூர் மற்றும் வெளியூர் பார்வையாளர்களுக்கும் எல்லா வேளையும் கறிவிருந்துடன் உணவு வழங்கப்படுகிறது.

இது ஒரு போட்டி அல்ல; இளையோருக்கான பேருவிழா, ஊரின் பெரும் விருந்தோம்பல் வழக்கின் வெளிப்பாடு.